Wednesday, 26 November 2014

youth arrested for kidnapping sodomising and killing Minor boy

8 வயது சிறுவனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றவன் கைது

லக்னோ, நவ.26-

உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தை சேர்ந்த கொத்வாலி டெஹத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடந்த 22-ம் தேதி கடத்தப்பட்டான்.

அவனை கடத்திய மர்ம நபர், சிறுவனின் பெற்றோர் செல்போனை தொடர்பு கொண்டு, ’உங்கள் மகனை விடுவிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை உடனடியாக தர வேண்டும்’ என்று தொடர்ந்து மிரட்டி வந்தான்.

இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர்களின் செல்போனுக்கு அழைப்பு வந்த மறுமுனையை கண்காணித்த போலீசார், நான்கே என்ற 18 வயது நபரை நேற்று கைது செய்தனர்.

சிறுவன் எங்கே? என்று அவனிடம் போலீசார் விசாரித்தபோது, அவனை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டதாக நான்கே தெரிவித்துள்ளான். இறந்த சிறுவனின் உடலை என்ன செய்தான்? என்பது தொடர்பாக அவனிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.


No comments:

Post a Comment