Monday, 3 November 2014

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி

லக்னோ, நவ.3-

உத்தரப்பிரதேசம் மாநிலம், சிதாபூர் மாவட்டம், ஜின்னாபூர்வா தங்கான் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு கனரக மின்சாரத்தை கடத்தும் கம்பி வழித்தடங்கள் அதிகம் உள்ளன.

நேற்றிரவு, இந்த வழித்தடக் கம்பிகளில் ஒன்று அறுந்து விழுந்ததில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து சுமார் 17 வயது மதிக்கத்தக்க பர்வேஷ், சுனீல், தேஷ்ராஜ் மற்றும் கோபி என்ற பத்து வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மின்கம்பி விழுந்து உடல் கருகிய ராமு என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment