Thursday, 20 November 2014

Largest Human Flag campaign to be held for Guinness in chennai

கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரம் பேருடன் மனித தேசியக் கொடி நிகழ்ச்சி

சென்னை, நவ.19-

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் ’மனித தேசியக் கொடி’ உருவாக்கப்படவுள்ளது.

ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பில் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்படவுள்ள இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், உலகின் மிக நீளமான மனிதக் கொடி வடிவில் இந்தியக் கொடியின் நிறத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ரோட்டரி மாவட்ட கவர்னர் நாசர் கூறினார்.

புதிய கின்னஸ் சாதனையை படைக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக இதுவரை சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment