Tuesday, 25 November 2014

Bomb threat in Ramanathapuram school proves hoax

வெடிகுண்டு மிரட்டலையடுத்து கீழக்கரையில் பள்ளிகள் மூடல்

ராமநாதபுரம், நவ.24-

ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை நகரசபை பெண் தலைவரான ரட்டியா துல் கத்தாரியா என்பவருக்கு இன்று காலை ஒரு மர்மக் கடிதம் வந்தது.

அவரது கணவர் அதை பிரித்து, படித்துப் பார்த்தபோது, கீழக்கரை பகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக இன்று காலை 11.18 மணிக்கு அந்த குண்டுகள் வெடித்துச் சிதறும் என்றும், முடிந்தால் அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கீழக்கரை பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு அத்தனை பள்ளிகளையும் முழுமயாக சோதனை செய்தது.

இந்த சோதனைகளில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால், யாரோ சில விஷமிகள் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டிருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment