Tuesday, 4 November 2014

கோர்ட் அறைக்குள் செல்போன் பேசியவருக்கு அபராதம்

புவனேஸ்வர், நவ.4-

கோர்ட் அறைக்குள் விசாரணை நடைபெற்றபோது செல்போனில் பேசியவருக்கு ஒடிசா நீதிபதி அபராதம் விதித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கேண்ட்ரபரா மாவட்டம், மதுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நிலம்பர் மாலிக். நேற்று, கேண்ட்ரபரா மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்த இவர், தலைமை மாஜிஸ்திரேட் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்த அறைக்குள் சென்றார்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தனது சட்டைப் பையில் இருந்து சாவகாசமாக செல்போனை எடுத்த அவர், யாருக்கோ போன் செய்து, மிக சுவாரஸ்யமாக கதையளக்கத் தொடங்கினார்.

இதைக் கண்டு எரிச்சல் அடைந்த மாஜிஸ்திரேட், கோர்ட்டின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்துக்காக நிலம்பர் மாலிக்குக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை கட்டிய பின்னரே கோர்ட் அறையில் இருந்து வெளியே செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார்.


No comments:

Post a Comment