ராகுலை கோமாளி என்று விமர்சித்ததால் நீக்கப்பட்ட முஸ்தபாவை மீண்டும் சேர்த்துக் கொண்டதாக காங். அறிவிப்பு
திருவனந்தபுரம், நவ.25-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியும், ஊழல் பிரச்சினைகளும், விலைவாசி உயர்வும்தான் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணம் என விவாதிக்கப்பட்டது.
இதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, கட்சியின் தோல்வி குறித்து கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்கலில் ஒருவரான டி.எச்.முஸ்தபா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தியை “கோமாளி” என்று குறிப்பிட்டிருந்தார்.
முஸ்தபாவின் இந்தப் பேச்சு குறித்தும் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ராகுல் காந்தியை அவதூறாக பேசிய முஸ்தபாவை தற்காலிக நீக்கம் செய்ய அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பல முறை செய்தியாளர்களை சந்தித்த முஸ்தபா, ராகுல் காந்தியை கோமாளி என்று கூறிய எனது கருத்தை நான் எப்போதுமே வாபஸ் பெற்றுக் கொள்ள போவதில்லை என அழுத்தம், திருத்தமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கோரியும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு முஸ்தபா கடிதம் எழுதி இருந்ததாகவும், அவரை மன்னித்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி டெல்லி தலைமை அனுமதி அளித்ததையடுத்து, அவர் மீண்டும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment