Tuesday, 19 August 2014

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு


    விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு
மத்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன.
இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் தொழிற்துறை முதன்மை செயலாளர் கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார்.
அதில் ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை ஓரம் வழியாக கெயில் நிறுவனம் குழாய்களை பதித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று எரிவாயு குழாயை விளை நிலங்கள் வழியாக எடுத்து செல்ல ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடையை நீக்க கோரி கெயில் நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தடையை நீக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.
மேலும் நிலத்தில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுவது குறித்து தனியாக மனு தாக்கல் செய்யுமாறு கெயில் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment