Thursday, 28 August 2014

TANKER

2 killed, two injured as oil tanker catches fire
    Ghaziabad, Aug 25 (PTI) At least two persons were killed
and as many injured when a furnace oil tanker caught fire
while they were welding it for leakage near RTO office in Kavi
Nagar area here.
    According to Deputy Superintendent of Police Ran Vijay
Singh, two charred bodies of the technicians beyond
recognition were recovered from the debris.
    Two other technicians, Nand Lal and Kshati Prasad, have
been hospitalised with severe burn injuries in Safdarjung
hospital in Delhi.
    The area has been cordoned-off as police are suspecting
more causalities, he said, adding that identities of the
deceased were not established yet.
    The rescue and search operation was on till the last
report came in.

Wednesday, 27 August 2014

Cocaine worth Rs 8 crore seized in Manipur

கொல்கத்தா, ஆக.26-

மணிப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ கொக்கைய்னை போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டதில் 1.5 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட கொக்கெய்னின் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, 26 August 2014

சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ் ஏறி கொண்டு இருந்த செல்போன் மீது தெரியாமால் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது போன் கடும் வெப்பம் அடைந்துள்ளது. இதனால் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில் "நான் தூங்கியபோது போனில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக எனது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நான் என்னுடையை போனை தூக்கியபோது அது மிகவும் வெப்பமாக இருந்தது. என்னால் அதனை தொடக் கூட முடியவில்லை." என்று கூறியுள்ளார். அதிகமாக வெப்பம் ஆகும் ஐ-போனால் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஐ-போனை வைத்து தூங்கிய  18 வயது ஜாக் பார்கெர் என்ற வாலிபர் கையில் காயம் ஏற்பட்டது. பிப்ரவரியில் பள்ளி மாணவியின் பாக்கெட்டில் இருந்த ஐ-போன் எரிந்ததில் அவர் காயம் அடைந்தார். 14 வயது சிறுமி வைத்திருந்த ஐ-போன் எரிந்ததில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது ஐ-போன் வெப்பத்தால் காயம் அடைந்த பெண் தனது இரண்டாவது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாது என்று மிகவும் அச்சத்தில் உள்ளார்.

சார்ஜ் ஏறும்போது அதில் பேச வேண்டாம், கேம் விளையாட வேண்டாம் என்று பல்வேறு விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும், அதனை மீறுபவர்கள் உள்ளனர். யாரும் தூங்கும் போது தங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளில் கொடுப்பதும் தவறு. இதுபோன்ற தவறுகளால் பொதுமக்கள் பரவலாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

Monday, 25 August 2014

சீனா தயாரிக்கும் ஒலியைவிட அதிவேகமாக செல்லும் நீர்மூழ்கி கப்பல்

                                             சீனா தயாரிக்கும் ஒலியைவிட அதிவேகமாக செல்லும் நீர்மூழ்கி கப்பல்
சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. உலகிலேயே மிக அதிவேகமாக பாய்ந்து செல்லும் புல்லட் ரெயில்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் ஆய்வு மேற்கொண்டு முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஒலியை விட மிக அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய ‘சூப்பர் சோனிக்’ நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கிறது.
இக்கப்பலை சீனாவின் ஹார்பின் இண்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் நிபுணர்கள் வடிவமைத்து தயாரிக்கின்றனர். இதில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நீர் மூழ்கி கப்பல் சீனாவில் ஷாங்காய் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு 2 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். சான்பிரான்சிஸ்கோ அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும், ஷாங்காய் சீனாவின் கிழக்கு பகுதியிலும் உள்ளது.
அவற்றின் இடையேயான தூரம் 9,873 கி.மீட்டர். சீனாவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பகைமை நிலையுடன் கூடிய பனிபோர் இருந்தது. அப்போது சோவியத்ரஷியா ‘சூப்பர் கேவியசன்’ என்ற அதிநவீன நீர் மூழ்கி கப்பலை தயாரித்தது.
இது மணிக்கு 370 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன்படைத்தது. அதுவே தாங்கள் இந்த ‘சூப்பர் சோனிக்’ நீர்மூழ்கி கப்பல் உருவாக்க தூண்டுதலாக இருந்தது என்று என்ஜினீயரிங் பேராசிரியர் லீ பெங்சன் தெரிவித்தார்.

Friday, 22 August 2014

JK employees detained for staging protest outside CM residence

Srinagar, Aug 19 (PTI) Hundreds of Jammu and Kashmir
government employees were today detained as they tried to
march toward Chief Minister Omar Abdullah's residence to stage
a demonstration in support of their demands including
regularisation of daily-wage and casual workers.
The employees of Public Health Engineering (PHE)
department marched towards the high security Gupkar residence
of the Chief Minister, officials said.
As the protesting employees reached Sonwar, the police
asked them to disperse but they insisted on going ahead with
the demonstration, following which fifteen of them were
detained.
The protest call was given by Kashmir PHE Joint Employees
Association in support of its demand for regularisation of
daily wage workers, casual labourers and need-based workers.
They also demanded their pending salaries be released and paid
regularly.
The employees have been frequently holding protest
demonstrations in support of their demands. Over the past
several months, the employees staged various demonstrations
and sit-ins in support of their demands.
They have threatened to gherao the residences of ministers
in their respective constituencies if their demands were not
met immediately.

Wednesday, 20 August 2014

உலகின் அதிக வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த ஜப்பான் தாத்தா

உலகிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானை சேர்ந்த சக்காரி மோமோய் ’கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இன்று இடம் பிடித்தார்.
உலகின் அதிக வயதான நபராக கின்னஸில் இடம்பிடித்த ஜப்பான் தாத்தா

புக்குஷிமா அருகிலுள்ள மினியாமிசோனாவில் 1903-ம் ஆண்டு பிறந்து, ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கு பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வரும் சக்காரி மோமோய்-க்கு தற்போது 111 வயது ஆகின்றது.

உலகிலேயே அதிக வயதான ஆணாக கின்னஸில் இடம் பிடித்திருந்த அமெரிக்காவை சேர்ந்த அலெக்ஸாண்டர் இமிச் என்பவர் கடந்த ஜுன் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, இந்த அங்கீகாரம் சக்காரி மோமோய்-யை வந்தடைந்துள்ளது.

ஏற்கனவே, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் அங்கீகாரத்தை ஜப்பானின் ஒஸாக்கா நகரில் வாழ்ந்து வரும் மிசாவோ ஒக்காவா(116) என்ற மூதாட்டி பெற்றுள்ள நிலையில், உலகிலேயே அதிக வயதான ஆணும், பெண்ணும் வாழும் நாடு என்ற பெருமைக்குரிய அடையாளத்தை சக்காரி மோமோய்-யின் மூலம் தற்போது ஜப்பான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும், செவித்திறன் குறைபாடு தவிர வேறு எந்தவித உடல் சார்ந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என்றும், புத்தகம் படிப்பதிலும், டி.வி.யில் ‘சுமோ’ மல்யுத்தப் போட்டிகளை பார்த்து ரசிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

கின்னஸில் தனது பெயர் இடம் பெற்றது குறித்து, பெருமை பொங்க இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சக்காரி மோமோய், ‘இன்னும் 2 ஆண்டுகள்வரை வாழ விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Tuesday, 19 August 2014

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு


    விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு
மத்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன.
இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் தொழிற்துறை முதன்மை செயலாளர் கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார்.
அதில் ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை ஓரம் வழியாக கெயில் நிறுவனம் குழாய்களை பதித்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று எரிவாயு குழாயை விளை நிலங்கள் வழியாக எடுத்து செல்ல ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடையை நீக்க கோரி கெயில் நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தடையை நீக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.
மேலும் நிலத்தில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுவது குறித்து தனியாக மனு தாக்கல் செய்யுமாறு கெயில் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Thursday, 14 August 2014

Non stop music Online

Maalaimalar-World No 1 leading Tamil Daily News website delivers Tamil Nadu News.
Hello FM is the largest network of private FM radio stations in Tamil Nadu and Puduchery.The world's largest scanner frequency and radio communications reference source.Radio Hello 106.4 FM is live radio broadcasting station on air at Chennai in Tamil Language.Listen India Hello FM - 106.4 FM Live Radio Online - Free Internet Radio Station Streaming Broadcast Channel.
Radio Hello 106.4 FM is live radio broadcasting station on air at Chennai in Tamil Language. Easyinfo - Radio Hello 106.4 FM Tamil from Chennai. Radio Hello 106.4 Fm radio live is broadcasting 24x7 basis on Internet.

Monday, 11 August 2014

காமன்வெல்த்போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
காமன்வெல்த்போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்
                                                                                                                                                                                                                                                                       

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா 19.12.2011 அன்று ஆணையிட்டிருந்தார். இதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை 20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை;

மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து ஊக்கத் தொகையினைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியமைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, முதல்– அமைச்சர் ஜெயலலிதா ‘‘வாழ்த்துக்கள். நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பாராட்டும் தெரிவித்தார்.

தங்களால் தமிழ்நாடும், இந்தியாவும் பெருமை பெற்றதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலாளர் ஜெயக்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, 8 August 2014

NEPAL-SAARC

Nepal to host SAARC summit in November
    From Shirish B Pradhan
    Kathmandu, Aug 5 (PTI) The 18th SAARC summit will be held
here in November, Nepal's foreign ministry said today.
    A cabinet meeting here decided Nepal would host the summit
in November, said assistant spokesperson at the Foreign
Ministry, Bharat Raj Regmi.
    The two-day summit will be inaugurated on November 26.
Nepal will chair the summit of the regional grouping.
    The dates have been circulated by the SAARC Secretariat
based in Kathmandu to other member countries.
    Afghanistan, Bangladesh, Bhutan, India, the Maldives,
Nepal, Pakistan and Sri Lanka are the eight members of the
South Asian Association for Regional Cooperation (SAARC).
    Nepal has formed a high-level preparatory committee and
several other panels to make the summit a success, Regmi said.
    Nepal is hosting the SAARC Summit after an interval of 12
years. The country previously hosted the summit in 2002, when
then Prime Minister Atal Behari Vajpayee and former Pakistani
military ruler Pervez Musharraf met in Kathmandu.
    The SAARC preparatory committee meeting consisting of
joint secretaries will take place on November 22 and the
foreign secretary level standing committee will meet from
November 23-24.