Monday, 1 September 2014

சென்னையில் ஒரே நாளில் 420 விநாயகர் சிலைகள் கரைப்பு

                                     சென்னையில் ஒரே நாளில் 420 விநாயகர் சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. போலீஸ் அனுமதியுடன் சென்னையில் 1800–க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 6–ந் தேதியும், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ராமகோபாலன் தலைமையில் 7–ந் தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
இதற்கிடையே சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசி மேடு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் நேற்று இந்து முன்னணி சார்பில் 21 சிலைகளும், சிவசேனா சார்பில் 27 சிலைகளும் மற்றும் மற்ற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் உள்பட மொத்தம் 420 சிலைகள் கரைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், மதுரை, நெல்லை ஆகிய 5 இடங்களில் நேற்று போலீஸ் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றதால் மோதல் ஏற்பட்டது.
எனவே சென்னையில் 6 மற்றும் 7–ந் தேதிகளில் நடைபெறும் ஊர்வலத்தின் போது பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சென்னையில் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலங்களின் போது மோதல் ஏற்படாமல் தடுக்கவும், ஊர்வலம் அமைதியாக நடத்தவும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment