Thursday, 1 May 2014

Health News in tamil

இடுப்பு வலியை குறைக்கும் சலபாசனம்


செய்முறை:

முதலில் விரிப்பில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். 


20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும்.

சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும். சலபாசனம் என்ற யோகாசன முறை இடுப்பு வலிக்கு நல்ல தீர்வு.  

No comments:

Post a Comment