ஸ்ரீநகர், ஜூலை 20-
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவதை கண்டித்து கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் தலைநகர் புது டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு உயர்தூதரகத்தின் முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இந்த அத்துமீறலை கண்டித்து குத்வானி- குவைமோ கிராமம் அருகே நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்தும், பாதுகாப்பு படையினரின் அராஜகத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்ய போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி எதிர் தாக்குதல் நடத்தினர்.
நிலைமை கட்டுங்கடாமல் போவதை உணர்ந்த போலீசார், போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். போலீசார் சுட்ட தோட்டாக்களில் சில சுஹைல் அஹமத் என்ற 15 வயது சிறுவனின் உடலில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவன் சுருண்டு விழுந்தான்.
அவசர, அவசரமாக அவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்ற போது, வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து சுஹைல் அஹமத்தின் பிரேதத்தை ஊர்வலமாக சுமந்துச் சென்ற உள்ளூர் மக்கள் அவனது வீட்டில் ஒப்படைத்தனர்.
மனித உரிமைக்காக போராடிய சிறுவன் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் குல்காம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.